Breaking News

ஸ்ரீ ல.சு.க.யின் பிரச்சினை வேறு, மக்கள் பிரச்சினை வேறு- JVP



ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முகம் கொடுத்துள்ள எந்தவொரு பிரச்சினையும் நாட்டு மக்களின் பிரச்சினைகளோடு எந்த வகையிலும் தொடர்புபட்டது அல்ல என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

மே தினம் நடாத்தும் போது எந்த மே தின மேடைக்கு செல்வது என பிரச்சினைப்பட்டுக் கொண்டனர். நடைபவனி நடைபெறும் போது செல்வதா இல்லையா? என்ற பிரச்சினை பாரியளவில் பேசப்பட்டது. தற்பொழுது 65 ஆவது கூட்டத்தில் கலந்துகொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை. அடுத்து, சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் மாற்றுவதும் நீக்குவதும்.

இந்த எந்தவொரு பிரச்சினையும் பொதுமக்களின் வாழ்வாதாரத் தேவைகளுடனும், நாட்டின் அபிவிருத்தியுடனும் சம்பந்தப்பட்டதல்ல. இன்று அமைச்சர்கள் இந்தப் பிரச்சினை பற்றியே கவனம் செலுத்துகின்றனர். பொது மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத நிலையில் காலம் கழிகின்றது எனவும் அவர் மேலும் கூறினார்.