ஜனநாயக ரீதியில் நம்பிக்கையுடன் போராடுங்கள்!
தமிழ் மக்கள் தாங்கள் எதிர்பார்க்கின்ற உரிமைகள் மற்றும் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கத்தி டமிருந்து பெற்றுக் கொள்வதற்கு ஜனநாயக ரீதியில் நம்பிக்கை தளராது தொடர்ந்தும் போராடிக்கொ ண்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்த இலங்கை க்கான தூதுவர் அதுல் கேசப், தமிழருக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தம்மாலான அழுத்த ங்களை அமெரிக்கா தொடர்ந்தும் வழங்கிக் கொண்டிருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் யாழ். ஊடகவியலாளர்களுக்கும் அமெரிக்க தூதுவருக்குமான சந்திப்பொன்று நேற்றுக்காலை 9.45 மணியளவில் யாழிலுள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றிருந்தது.இச்சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அமெரிக்க தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், தற்போதுள்ள இலங்கை அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்களை விட ஆட்சி நிர்வாகத்தில் நல்ல மாற்றங்களை காண்பித்து வருகின்றது.
தமிழர்கள் எதிர்நோக்கி வரும் பல பிரச்சினைகளுக்கு இந்த அரசு மூலமாக தீர்வுகளை பெற்றுக் கொள்ளமுடியும் என நாங்கள் நம்புகிறோம். இதற்காக எம்மால் முடிந்த அரசியல் ரீதியான அழுத்தங்களை இலங்கை அரசு மீது ஜெனிவாவிலும் நேரடியாகவும் நாம் தெரிவித்து வருகின்றோம்.
நீங்கள் குறிப்பிடுகின்ற வடக்கு கிழக்கில் திட்டமிடப்பட்டு மேற்கொள் ளப்பட்டு வரும் பெளத்த மயமாக் கல்கள் மற்றும் அதிகரித்த இராணுவப் பிரசன்னம் தொடர்பிலும் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம்.
இது தொடர்பில் நான் அரசாங்க தரப்பினருடன் விவாதிப்பேன். அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு வரும் புதிய அரசியல மைப்புத் திருத்தச்சட்டத்தில் தமிழர் களுக்குரிய அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது தொடர்பிலும் நான் எடுத்துக் கூறுவேன்.
நான் தமிழர்களுக்கு என்னாலான உதவிகளை எப்போதும் செய்து கொண்டிருப்பேன். எனினும் நான் இலங்கையன் அல்ல. ஆகையால் எனது வலியுறுத்தல்களைத் தாண்டி என்னால் அவ்விடயத்தில் உரிமை கோரமுடியாது.
உரிமை கோருவதற்கு இலங்கை மக்களுக்கே உரித்துண்டு. ஆகவே தமிழ்மக்கள் தம் மீதான அடக்குமுறைகளை வெளிப்படுத்தவும் அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவும் இலங்கை அரசாங்கத்துடன் ஜனநாயக ரீதியில் போராட வேண்டும்.
ஜனநாயக ரீதியிலான உங்களின் வெளிப்படுத்தல்களுக்கு படைத்தரப்பினரின் அச்சுறுத்தல் இருக்குமாயின் அமெரிக்க தூதரகத்தில் முறையிடுங்கள். அதன் பின்னான நடவடிக்கைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம்.
தற்போதைய எனது வருகை யின்போது வடக்கில் அண்மைக் காலங்களில் படையினரால் ஊடக வியலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளேன்.
மேலும் போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் மனிதவுரிமை மீறல் பிரச்சினைகளை எதிர்கொண்ட தரப்பினருக்கு இழப்பீடுகள் மற்றும் விசாரணை மூலமாக நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் அமெரிக்கா இலங்கை அரசாங்கத் திடம் வலியுறுத்தும்.
தமிழர்கள் தமது நம்பிக்கையை தளரவிடாது தமது தீர்வை வலி யுறுத்திக்கொண்டே இருக்க வேண் டும் எனஅமெரிக்கத்தூதுவர் அதுல் கேசப் தெரிவித்திருந்தார்.