வடக்கு முதலமைச்சருக்கு அவைத் தலைவர் சிவஞானம் சவால்
முதலமைச்சரால் உருவாக்கப்பட்ட உள்ளூரா ட்சிகள் தொடர்பான ஆலோசனைக் குழுவில் தனது பெயர் இடம்பெறாமை குறித்துத் தான் கவலையடையவில்லை என்றும் இதனூடாக தனது அரசியல் பயணத்தை யாரும் அஸ்தமனம் செய்து விட முடியாது என்றும் முதலமைச்சரிடம் அவைத் தலைவர் சீ.வி. கே சிவஞானம் சவால் விடுத்துள்ளார்.
அண்மையில் உள்ளூராட்சிகள் சபைகளுக்கு முதலமைச்சரால் உருவாக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழுவில் தனது பெயர் இடம்பெறாமை குறித்து நேற்றைய 58 வது மாகாணசபை அமர்வில் அவைத் தலைவர் சிவஞானம் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் தானும் ஒரு மாகாண சபை உறுப்பினர் என்பதையும், தனது செயற்பாடுகளை வேறு வழிகளில் பயன்படுத்துவதற்கான வழிகளில் தன்னை இணைத்துக் கொள்ளாமை குறித்தும் தனது அதிருப்தியை வெளியிட்டார்.
குறித்தகுற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பதில்கூற வேண்டும் என்றும் இவ்விடயத்தில் உள்நோக்கம் ஏதும் இருக்குமானால், அதனை வெளிக் கொண்டு வரவேண்டும் என்றும், இவ்வாறான மறைமுக பழிவாங்கல் செயற்பாடுகள் ஊடாக தனது அரசியல் வாழ்வை யாரும் அஸ்தமனம் செய்து விட முடியாது என்றும் சவால் விடுத்த சிவஞானம் தனது இறுதிக்காலம் வரை தனது அரசியல் பயணம் தொடரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்