Breaking News

காணாமல் போனோர் அமைப்பு சட்டமூலம் தொடர்பில் ரத்தன தேரர் அதிருப்தியில்



காணாமல் போனோர் தொடர்பான அலுவலக அமைப்பு சட்டமூலம் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முறை குறித்து தாம் அதிருப்தியடைந்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

ஒரு சட்டமூலத்தை நிறைவேற்ற உரியமுறைகள் இருக்கின்றன. அரசாங்கம் அதனை கையாண்ட விதமும் கூட்டு எதிர்க்கட்சியினர் செயற்பட்ட விதமும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று ரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டபோதும் அந்த திருத்தங்கள் போதுமானவையல்ல என்று தேரர் தெரிவித்துள்ளார்.