என்.எம். பெரேராவின் கொள்கை அரசாங்கத்தை எதிர்க்க பெரும் சக்தி-மஹிந்த
இந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு என்.எம். பெரேராவின் இடது சாரிக் கொள்கையுடன் கைகோர்ப்பது எமக்கு பெரும் சக்தியாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
லங்கா சமசமாஜக் கட்சியின் முன்னாள் தலைவர் கலாநிதி என்.எம். பெரேராவின் நினைவு தினம் நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
என்.எம். பெரேராவுடன் 70 களிலிருந்து ஸ்ரீ ல.சு.க. நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இதனால், அப்போது அரசியலில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு அவர் ஒரு பெரும் சக்தியாக மாறியது.
தற்போதைய கால கட்டத்திலும் ஸ்ரீ ல.சு.க. மற்றும் மகஜன எக்ஸத் பெரமுன என்பன இணைந்து அரசாங்கத்துக்கு எதிரான ஒரு சக்தியாக எழுந்திட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.