கடந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை - சந்திரிகா
ஸ்ரீலங்கா சுதந்திரம் அடைந்ததுக்கு பின்னர் ஆட்சியமைத்த எந்தவொரு அரசாங்கமும் தமிழ் மக்களிற்கு ஆற்ற வேண்டிய பணிகளை செய்யவில்லையென முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்க த்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டார நாயக்ககுமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இதனால் தமிழ் மக்களது மனதில் ஏற்பட்ட கோபமும் விரக்கத்தியுமே பாரிய யுத்தம் ஏற்பட காரணமாக இருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் வேலணையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த முப்பது வருட காலத்தில் யுத்த்தினால் இடம்பெற்ற அழிவுகள் பாரதுரமானவை எனவும் எதிர்காலத்தில் தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்வதற்கு அனைவருக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கள மக்களுக்கு கிடைக்கின்ற சந்தர்ப்பம் தமிழ் மக்களுக்கும் கிடைக்கபெற வேண்டும் என்பதில் அரசாங்கம் அர்பணிப்புடன் செயலாற்றுகின்றது.
காணமல் போனவர்கள் தொடர்பில் விசாரனைகளை மேற்கொள்வதற்காக செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதனூடாக நீண்டகாலமாக காணப்படுகின்ற காணமல் போனவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
யுத்த்தின் போது இடம்பெற்ற போர்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரனை நடாத்தப்பட்டு அதில் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.
எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சனைகள் மீளவும் ஏற்பாடத வகையில் மக்களது மனதில் உள்ள போர் தொடர்பான வடுக்களை அகற்றி நல்ல மனதினை உருவாக்க முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதனால் எதிர்காலத்தில் நாம் அனைவரும் இனங்களுக்குரிய தனித்துவங்களுடன் இலங்கையர் என்ற எண்ணப்பாங்குடனும் வாழ வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டார நாயக்ககுமாரதுங்க தெரிவித்துள்ளார்.