Breaking News

முன்னாள் தலைவர் நண்பர்களுடன் சீட்டு விளையாடுகிறாராம்!!!



ராஜபக்ச குடும்பத்தினர் நாட்டில் ஒரு காலத்தில் தமது வேலைகளை காட்டியதாகவும் தற்போது ராஜபக்ச வினரின் காலம் முடிந்து விட்டது எனவும் மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ராஜபக்சவினரின் காலம் முடிந்து விட்டதால், அவர்கள் பாத யாத்திரை செல்வதால், நாட்டு எந்த ஆட்சி மாற்றமும் ஏற்படபோவதில்லை.

அத்துடன் தேசிய அரசாங்கம் என்பது மகிந்த ராஜபக்ச, நண்பர்களுடன் ஓய்வு நேரத்தில் விளையாடும் சீட்டு விளையாட்டு அல்ல என்பதை மனத்தில் வைத்து கொள்ள வேண்டும்.

மகிந்த ராஜபக்ச சீட்டு விளையாடி வருகிறார். இதனை தொடர்ந்தும் விளையாட முடியாது.

மேலும் நாட்டு மக்கள் 11 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்ய இரண்டு முறை சந்தர்ப்பத்தை வழங்கினர். தற்போது அரசியலில் இருந்து ஓய்வு பெற்று ஓய்வெடுக்க வேண்டும்.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியுடன் 58 லட்சம் மக்கள் இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சி கூறி வருவது முற்றிலும் பொய்யானது.

உதய கம்மன்பிலவும் வீமல் வீரவன்ஸ, மகிந்த ராஜபக்சவை கடைக்கு அழைத்து செல்கின்றனர். முடிந்தால் 58 லட்சம் மக்களை கொழும்பு அழைத்து வந்து காட்டுமாறு கம்மன்பில மற்றும் வீரவன்ஸ ஆகியோருக்கு சவால் விடுகின்றேன்.

அரசியல்வாதிகள் பொய்யான பரப்புரைகளுக்கு ஏமாற வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

கூட்டு எதிர்க்கட்சி கூறுவது போல் 58 லட்ச மக்களின் ஆதரவு ராஜபக்சவுக்கு இருக்கின்றது என்றால், அவர்களின் வாக்குகள் கி்டைத்தது என்றால், வீதி வீதியாக நடக்கும் தேவை இருக்காது எனவும் இசுரு தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.