Breaking News

முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் உயிரிழப்பு : பொதுமக்கள் மத்தியில் சந்தேகம்..!



புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் உயிரிழந்து வருவது மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. 

குறித்த மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு உண்மை நிலையை கண்டறியப்பட வேண்டும் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், புனர்வாழ்வு பெற்ற போராளிகளை அனைவரும் சர்வதேச வைத்திய நிபுணர் குழுவினால் பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது போராளிகள் கைது செய்யப்பட்டதுடன் பலர் சரணடைந்தனர். அவர் பல புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்ட மகளீர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி சிறிது காலத்திற்குள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அந்த சம்பவம் பெரிதுபடுத்தப்படவில்லை. ஆனால் தற்போது முன்னாள் போராளிகள் ஒவ்வொருவராக மர்மமான முறையில் மரணமடைந்து வருவவது மக்கள் மத்தயிலும் முன்னாள் போராளிகள் மத்தியிலும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

புனர்வாழ்வு முகாம்களில் விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் உணவில் விசம் கலக்கப்பட்டதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்க ப்பட்டுவருகிறது. இந்த உயிரிழப்புக்களின் உண்மை நிலையை ஆராய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவர்களின் உடல் ஆரோக்கியம் குறைவடைவதாக கூறுகிறார்கள். 

புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து முன்னாள் பேராளிகளையம் சர்வதேச வைத்திய நிபுனர் குழுவின் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும். எமது இனம் தொடர்ந்தும் அழித்து செல்வதை அனுமதிக்க முடியாது.