தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இன்று
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 2989 பரீட்சை நிலையங்களில் இன்று நடைபெறவுள்ள இப்பரீட்சையில் 350701 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
இரு வினாத்தாள்களைக் கொண்ட இப்பரீட்சையின், முதலாம் வினாத்தாள் காலை 9.30 மணிக்கு பரீட்சார்த்திகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. இது 10.15 மணி வரையில் 45 நிமிடங்கள் நடைபெறவுள்ளது. பின்னர், இரண்டாவது வினாப் பத்திரம் 10.30 மணிக்கு வழங்கப்பட்டு 11.45 மணிக்கு பரீட்சை நிறைவடையவுள்ளது.
இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இணைப்பு மத்திய நிலையம் மற்றும் பரீட்சை நிலையம் என்பவற்றை கண்காணிப்பதற்கு பரீட்சைத் திணைக்களம் மற்றும் மாகாண கல்வி அமைச்சு என்பவற்றின் அதிகாரிகள் 24 மணி நேரமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு. எம்.என்.ஜே. புஷ்பகுமார கூறியுள்ளார்.
அனுமதியின்றி எந்தவொரு நபரும் பரீட்சை நிலையத்துக்குள் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பரீட்சை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படும் எவரையும் கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் மேலும் கூறியுள்ளார்.