இலங்கையில் மற்றொரு அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரி
சிறிலங்காவுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த பேச்சுக்களை நடத்துவ தற்காக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச் செயலர் வில்லியம் ஈ ரொட் நேற்று சிறிலங்கா வந்துள்ளார்.
இவர் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து, சிறிலங்கா அரசாங்கத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவிருப்பதாக, சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்.