காணாமல் போனோர் அலுவலகம் நீதியை பெற்றுக்கொடுப்பதாக அமையவேண்டும்
பாதிக்கப்பட்டோருக்கு நீதியை பெற்றுக்கொ டுப்பதாக காணாமல் போனோர் அலுவலகம் அமைய வேண்டுமெனவும் அதற்கு முறையான சட்ட நெறிமுறைகளை பின்பற்றி குறித்த அலுவலகம் அமைக்கப்பட வேண்டுமெனவும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டோரின் தேவைகளை மையப்படுத்தியதாகவே குறித்த அலுவலகம் அமையவேண்டுமென தெரிவித்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகம, எதிர்காலத்தில் இவ்வாறான பொறிமுறைகளை உருவாக்குவதன் மூலம் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, குறித்த அலுவலகத்திற்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை சரியான முறையில் ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் பட்சத்திலேயே அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதாக அமையுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை காணாமல் போனோர் சட்டமூலம் தொடர்பில் பல தவறான அபிப்பிராயங்கள் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், இதுபற்றி முறையான தெளிவுபடுத்தல்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென மேலும் தெரிவித்துள்ளார்.
-