Breaking News

யானைக்குட்டியுடன் நடைபயிற்சியில் ஈடுபட்ட கோத்தபாய!



அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மாலை நேரங்களில் தங்களின் நாய் குட்டிகளுடன் நடை பயிற்சி செல்வது வழமையான நிகழ்வாகும்.

அதனை பார்த்து பழகிய அமெரிக்க குடியுரிமையை கொண்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, யானைக் குட்டியுடன் நடைபயிசியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாய் யானையை கொலை செய்து காட்டில் பிடித்த யானைக் குட்டியுடன் மாலை நேரத்தில் நடை பயிற்சி ஈடுபடும் பழக்கம் கொண்டிருந்ததாக கோத்தபாயவின் முன்னாள் மெய்க்காப்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

கோத்தபாயவின் முன்னாள் மெய்க்காப்பாளர் ராஜபக்ச ஆட்சியின் இறுதி காலப்பகுதியில் தனது பாதுகாப்பிற்காக நாட்டை விட்டு தப்பி சென்ற ஒருவராவார்.

குறித்த மெய்க்காப்பாளர் நாட்டிற்கு வெளியே இயங்கும் ஊடகங்களுக்கு கோத்தபாயவின் வாழ்க்கை வரலாற்றைவழங்குவதாக கோத்தபாய சந்தேகப்பட்டமையினால், மெய்க்காப்பாளர் தனது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

தற்போது வரை வேறு நாட்டில் வாழும் அவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கோத்தபாய தொடர்பில் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

“யானை ரோஷான்” என்பவர் தாய் யானையை கொலை செய்து காட்டில் பிடித்த சட்டவிரோத யானைக்குட்டி ஒன்றை கோத்தபாயவிடம் வழங்கியுள்ள நிலையில் 10 கடற்படையினர் குறித்த யானைக்குட்டியை பராமரிப்பதற்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த யானைக்குட்டியை கோத்தபாயவின் அப்போதைய உத்தியோகபூர்வ இல்லத்தின் (தற்போது அமைச்சர் ராஜித பயன்படுத்தும் உத்தியோகபூர்வ இல்லம்) வளர்த்து வந்துள்ளார்.

மோட்டார் வாகனம் கழுவ வேண்டும் என கூறி நீர் நிரப்பி யானைக்குட்டியை நீராட வைத்துள்ளனர். ஒரு நாளும் குறித்த யானைக்குட்டியை நீர் நிலைகளுக்கு அழைத்து செல்லவில்லை.

நீராடிய பின்னர் யானைக்குட்டியுடன் கோத்தபாய ராஜபக்ச மாலை நேரங்களில் நடைபயிற்சியில் ஈடுபட்டு வருவதற்கு பழகியுள்ளது.

உத்தியோகபூர்வ இல்லத்தின் பின்னால் உள்ள வீதியை மூடி வைத்துள்ள கோத்தபாய, யானைக்குட்டியை பார்த்துக் கொள்ளும் கடற்படையினருடன் சுற்றுமுற்று பார்த்து விட்டு கோத்தபாய நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மக்கள் நாய்க்குட்டிகளுடன் நடை பயற்சி செல்லும் போது கோத்தபாய யானைக்குட்டியுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மெய்க்காப்பாளர் வெளியிட்ட தகவல்களுக்கமைய கோத்தபாயவின் காலுக்கு காலுறை போட்டு விடுவதற்கு ஒரு இராணுவ அதிகாரியும், காலணிக்கு கயிறு கட்டுவதற்கு மேலும் அதிகாரியும் என்ற ரீதியில் காலுறை மற்றும் காலணி போட்டு விடுதற்கு மாத்திரம் கோத்தபாய இரண்டு இராணுவத்தினரை ஈடுபடுத்தியுள்ளார்.

அண்ணன் ஜனாதிபதியாகுவதற்கு முன்னர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவில் சம்பளம் பெற்ற ஒரு சாதாரண ஊழியாவார். பாதுகாப்பு செயலாளராகிய பின்னர் அவர் ஒரு அரசரை போன்று செயற்படுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது