Breaking News

காணாமற்போனோர் பணியகம் "மகிழ்ச்சி" - சுமந்திரன்



காணமல்போனோர் பணியகத்திற்கான சட்டம் நேற்று நாடாளுமன்றில் நிறைவேற்ற ப்பட்டதை தமிழ் தேசிய் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. 

நல்லிணக்கத்திற்கான நடவடிக்கையின் ஒரு ஆரம்பமான அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற காணாமல்போனோர் பணியக சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து பிரதான எதிர்கட்சி வகையில் அதனை வரவேற்று உரையாற்றுகையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றார்.