Breaking News

முல்லைத்தீவில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதி



முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசெயலர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் தாய், மற்றும் தந்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமக்கு 7 வருடங்களாக அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தும், குறித்த பிரதேசசெயலர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவையாளரும், காணி அலுவலரும் பக்க சார்பாக செயற்படுவதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.