மஹிந்தவிற்கு முழங்கால் வலி – வீட்டிற்கு மின்உயர்த்தி இணைக்க திட்டம்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள ஆடம்பரமான உத்தியோகப்பூர்வ இல்லத்தில் மின்உயர்த்தி (lift) வாங்குவதற்காக இரண்டு நாடுகளில் உள்ள நலன் விரும்பிகள் உதவி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த அந்த வீட்டில் மைத்திரிபால சிறிசேன 6 மாதங்களுக்கு மேலாக வசித்து வந்தார்.
பின்னர் ரூபா 40 மில்லியன் செலவில் குறித்த வீடு புதுப்பிக்கப்பட்டு மகிந்தவிடம் வழங்கப்பட்டது.
எவ்வாறாயினும்,அண்மையில் மகிந்த ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்த போது தன்னுடைய உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு உயர்த்தி இணைப்பது குறித்து அவர்களது நண்பர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் கொரியாவிற்கான பயணம் மேற்கொண்ட போதும் அவர் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் உயர்த்தி வாங்குவதற்காக அவரது நண்பர்கள் பணம் வழங்கியுள்ளார்கள். இரண்டு உயர்த்திகள் வாங்க பணம் போதாத காரணத்தினால் அபான்ஸிடம் இருந்து பணம் வாங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவருக்கு முழங்கால் பிரச்சினை காரணமாக மாடியில் உள்ள அவரது படுக்கையறைக்கு படிகளில் ஏற முடியாத காரணத்திற்காகவே மின்உயர்த்தி வாங்க திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.