தமிழ் மக்களுக்கு மஹிந்த துரோகம் இழைத்தது உண்மை – வெளிப்படையாக கூறிய ராஜித
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளார் என சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
யுத்தத்தை வெற்றி கொண்ட பின்னர் மஹிந்த ராஜபக்ஸ வடபகுதியிலுள்ள மக்களுக்கு எந்த விதமான உதவிகளையும் செய்யவில்லை. அதற்கு இடமளிக்கவுமில்லை என கூறினார்.