இராணுவத்தை காட்டிக் கொடுக்கும் நல்லாட்சி
நல்லிணக்கம் என்ற போர்வையில் முன்னாள் விடுதலை புலி போராளிகள் மீதான விஷ ஊசி விவகாரத்தை பரிசோதனை செய்வதற்கு அமெரிக்க வைத்தியர்களை வடக்கிற்கு அனுப்பியமையானது நல்லாட்சி அரசாங்கத்தின் காட்டிக்கொடுப்பின் உச்ச கட்டமாகும். இராணுவத்தை சர்வதேச விசாரணை பொறிமுறைக்குள் சிக்க வைப்பதற்கான திட்டமே இதுவென கூட்டு எதிர் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இராணுவத்தை வெளியேற்ற முதலமைச்சர் விக்னேஷ்வரன் மற்றும் சம்பந்தன் உள்ளிட்டவர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். ஆனால் எமது பாதயாத்திரை நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலானது என குற்றம் சுமத்துகின்றனர். இவர்களினதும் அமெரிக்காவினதும் நோக்கம் எதுவென்பது வெளிப்படுகின்றது. இதற்கு துணை சென்று இரட்டை தலை கழுதை புல் மேய்வது போன்று நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது.
பொரள்ளையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று இடம்பெற்ற கூட்டு எதிர் கட்சியின் ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.