Breaking News

வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்!- வட­க்கு அபி­வி­ருத்தி தொடர்பான கூட்டத்தில் சி.வி



அதிகாரப்பரவல் எமது மக்களுக்கு நன்மை பயப்பதாய் அமைய வேண்டும். சமாதானத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைய வேண்டும். அரசாங் கம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கொடுத்த வாக்குறுதிகளை காப் பாற்ற நடவடிக்கைகள் எடுத்தால்தான் அதன் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும் என்று வடக்கு முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தையும் வட­மா­காண சபை­யையும் உள்­ள­டக்கி புதிய கணிப்பு ஒன்றை செய்­யு­மாறு வேண்­டிக்­கொள்­கின்றேன்.

எம்­முடன் கலந்­தா­லோ­சித்து முன்­னேற வேண்டும் என்று கேட்டுக் கொள்­கின்றேன். எனது அமைச்சின் செய­லா­ள­ருடன் தொடர்பு கொண்டு உரிய நட­வ­டிக்­கை­களை எடுங்கள் என்று கூறி வைக்­கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

போர்க்குற்ற விசாரணை முறையாக நடந்தேறினால்த்தான் சமூக நல்லிணக்கத்தை எங்கள் மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பதை நாங்கள் மறந்து விடக்கூடாது என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று நடை­பெற்ற வட­மா­காண அபி­வி­ருத்தித் தேவை­களின் கணிப்பு பற்­றிய கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதமரின் ஆலோசகர் பாஸ்­க­ர­லிங்கம் தலை­மையில் இந்த கூட்டம் நடைபெற்றது.வடக்கு முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

2003இல் ஒரு தேவைகள் கணிப்பு நடை­பெற்­றது. பின்னர் 2004 இல் சுனா­மியும் 2009இல் போரின் முடி­வுக்­கட்­டமும் பல வித­மான பாதிப்­புக்­க­ளையும் அழி­வு­க­ளையும் கொண்டு வந்­தன. எனவே புதி­ய­தொரு கணிப்பு நடை­பெ­று­வது அவ­சி­ய­மா­கி­றது.

2010இல் பாக்­கிஸ்­தானில் கைபர் கணவாய் சார்ந்த இடத்தில் இவ்­வா­றான கணிப்­பொன்று நடந்­தது. அதில் உலக வங்கி, ஆசிய அபி­வி­ருத்தி வங்கி, ஐக்­கிய நாடு­க­ளுடன் ஐரோப்­பிய ஒன்­றி­யமும் ஈடு­பட்­டது. இங்கும் ஐரோப்பிய ஒன்­றி­யத்தை அழைப்­பது நன்மை பயக்கும் என்று நம்­பு­கின்றேன். அந்தக் கூட்­டத்தில் சமஷ்டி உரித்து வழங்­கப்­பட்ட ஆதி­வா­சி­களின் மாகாண அர­சாங்­கமும் முழு­மை­யாகப் பங்­கேற்­றது. இதேபோல் இந்தக் கணிப்பில் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தையும் எமது வட­மா­காண சபை­யையும் உள்­ள­டக்கி கணிப்பைச் செய்­யு­மாறு வேண்­டிக்­கொள்­கின்றேன். எம்­முடன் கலந்­து­ற­வா­டாது இப்­பேர்ப்­பட்ட செயற்­திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது எம்­மீது உங்கள் கருத்­துக்­களைத் திணிப்­ப­தாக அமையும். இத­னால்த்தான் எம்­மக்­களின் பிர­தி­நி­தி­க­ளையும் சேர்த்து இவ்­வாய்வைக் கொண்டு நடத்­து­மாறு வேண்­டிக்­கொள்­கின்றேன்.

பாகிஸ்­தா­னிய செயற்­திட்­டத்தின் போது 4 கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. முத­லா­வதாக , நாட்­ட­ர­சாங்­கத்தின் மீது பாதிக்­கப்­பட்ட மக்­களின் நம்­பிக்கை வளர உதவி செய்ய வேண்டும். இரண்­டா­வ­தாக, வேலை­வாய்பை உரு­வாக்கி வாழ்­வா­தார சந்­தர்ப்­பங்­களை உரு­வாக்க வேண்டும். .

மூன்­றா­வதாக மக்­களின் ஆதார வச­தி­களைக் கொடுத்­து­த­வுதல்அவசியம். நான்­கா­வது தீவி­ர­வா­தத்தைத் தடுக்க நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­குதல். இவற்றை வைத்தே பாகிஸ்­தானில் தேவைகள் பற்­றிய கணிப்பில் இறங்­கி­னார்கள்.

எமது கணிப்பு பற்­றிய விரி­வெல்­லையை நிர்­ண­யிக்கும் இந்தக் கூட்­டத்தில் மேற்­கண்ட விட­யங்­களை நாங்கள் கருத்­திற்­கெ­டுத்தல் நன்மை பயக்கும். எமது மக்­களின் நம்­பிக்­கையைப் பெற உங்கள் வினைத்­தி­ற­னான செயற்­பாடு உத­வி­ய­ளிக்கும். வேலை­யில்­லா­தோரின் விப­ரங்கள் கண்­ட­றி­யப்­பட்டு அவர்­க­ளுக்கு வேலை வாய்ப்­புக்­களை பெற்­றுக்­கொ­டுக்க நீங்கள் உதவி செய்­யலாம். மக்­களின் ஆதார வச­தி­களைப் பெற்­றுக்­கொ­டுக்க வழி­வ­குக்­கலாம். நல்­லெண்­ணத்தை உரு­வாக்க உங்­களின் ஒத்­து­ழைப்பு உதவி புரியும். ஆகவே முன்­னெச்­ச­ரிக்­கை­யுடன் கணிப்பின் விரி­வெல்­லையை நிர்­ண­யிக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கின்றேன்.

இவ்­வா­றான கணிப்பு தொடர்ந்­தி­ருக்கக் கூடிய அபி­வி­ருத்­தியை உறு­திப்­ப­டுத்த வேண்டும். பல்­வி­த­மான போரினால் உண்­டாக்­கப்­பட்ட பௌதீக ரீதி­யான, மனோ­ரீ­தி­யான பாதிப்­புக்­களை நீங்கள் கண்­ட­றிய வேண்டும். அவற்றில் இருந்து எம்­மக்­களை காப்­பாற்றி வழி­ந­டத்தத் தேவை­யான செயற்­திட்­டங்­களை வகுத்­துக்­கொ­டுக்க வேண்டும். அத்­துடன் பாதிக்­கப்­பட்ட எம் சமூ­கத்தின் மிகப் பல­வீ­ன­மான அல­கு­களை உள்­ள­டக்­கி­ய­தாக மேற்­படி செயற்­திட்­டங்கள் அமைய வேண்டும்.

இவற்­றிற்­கான அடிப்­படை தர­வுகள் சரி­யன முறையில் கண்­ட­றி­யப்­பட வேண்டும். முன்னர் தயா­ரிக்­கப்­பட்டு தற்­போது நடை­மு­றையில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு வரும் தர­வுகள் பிழை­யா­னவையாகும். உதா­ர­ணத்­திற்கு வித­வை­களைத் தமது கண­வன்­மார்கள் போரினால் இறந்­தார்கள் என்று சொல்ல வேண்டாம் என்று அலு­வ­லர்கள் நிர்ப்­பந்­தித்­த­தனால் வித­வைகள் 7000க்கு மேல் என்றும், இயற்கை மரணம் எய்­தியோர் 29000 என்றும் கூறப்­பட்­டுள்­ளது. புள்ளி விப­ரங்கள் பொய் விப­ரங்­க­ளாக அமையக் கூடாது. மக்­களின் அடி­மட்­டத்தில் இருந்து உண்­மை­யான தர­வுகள் பெறப்­பட வேண்டும்.

2003இல் தயா­ரிக்­கப்­பட்ட தேவைகள் கணிப்பில் மீள்­கு­டி­யேற்றம், சுகா­தாரம், கல்வி, வீட­மைப்பு, கட்­டு­மா­னங்கள், விவ­சாயம், வாழ்­வா­தா­ரமும் வேலை­வாய்ப்பும். மேலும் ஆற்றல் அபி­வி­வ­ருத்­தியும் நிர்­வாகச் சீர­மைப்பும் போன்ற விட­யங்கள் கணக்­கிற்கு எடுக்­கப்­பட்­டன. அதன் பின் நடை­பெற்ற பாதிப்­புக்கள் யாவும் கணக்­கிற்கு எடுக்­கப்­பட வேண்டும்.

நிரந்­த­ர­மான சக­ல­ரையும் உள்­ள­டக்கி முன்­னேறும் அபி­வி­ருத்­தியே எங்கள் எதிர்­பார்ப்பு.எமது வளங்கள் சூறை­யா­டப்­ப­டாமல் பாது­காக்க நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும். சுற்­று­லாத்­து­றையில் பிராந்­திய ரீதியில் பெருந்­திட்­ட­மொன்று தயா­ரிக்­கப்­பட வேண்டும்.

எமது வாழ்­வி­டங்கள் விவ­சாயம், மீன்­பிடி என்ற இரு­வித தொழில்­க­ளுடன் பாரம்­ப­ரி­ய­மாகப் பரீட்­ச­யப்­பட்ட பிராந்­தி­ய­மாகும். அவற்றை மைய­மாக வைத்து கைத்­தொ­ழில்கள் நடாத்­தப்­பட வழி­வ­குக்க வேண்டும். சிறிய மத்­திய தொழில் முயற்­சி­களில் நாம் இறங்க வேண்டும் என்­பதே எமது எதிர்­பார்ப்பு. பாரிய தொழிற்­சா­லைகள் பாரிய கட்­டி­டங்கள் ஆகி­யன எமது நில அமைப்­புக்கும், கலா­சார பின்­பு­லத்­திற்கும் ஒவ்­வா­தன என்­பதே எமது கணிப்பு. அவை பற்றி ஆரா­யுங்கள். கூட்­டு­றவு அடிப்­ப­டையில் தொழில் முயற்­சி­களும் கைத்­தொ­ழில்­களும் நடப்­பது உசிதம் என்றே நாம் நம்­பு­கின்றோம்.

மேலும் எம் இளைய சமு­தா­யத்தின் திறன்­களை அவ­தா­னிக்கும் போது தகவல் தொடர்பு சம்­பந்­த­மான தொழில்கள், காரி­யா­லய பின்­னணி வச­திகள் ஏற்­ப­டுத்தல் பொரு­ளா­தாரத் துறை­சார்ந்த தொழில்கள் போன்­ற­வற்றை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்­தலை அவர்கள் வர­வேற்­பார்கள் என்று எண்ண இட­முண்டு.

எமது தேவைகள் சம்­பந்­த­மான கணிப்­பாய்வை ஐக்­கிய நாடுகள் சென்ற வருடம் வெ ளிக்­கொண்டு வந்த 2015ஆம் ஆண்­டுக்குப் பின்­ன­ரான தொடர் அபி­வி­ருத்­திக்­கான நிகழ்ச்சி நிரலின் ஏற்­பா­டு­க­ளுக்கு அமைய கொண்டு நடத்­து­வது நன்மை பயக்கும் என்று எண்­ணு­கின்றேன். இதை உசாத்­து­ணை­யாக வைத்து முன்­னே­று­வது நல்­லது.

எம்மைப் பொறுத்­த­வ­ரையில் வட­மா­கா­ணத்தைத் தற்­போ­தைய பல­வீன நிலையில் இருந்து எழுப்பி மற்­றை­ய­வர்­க­ளுக்கு ஈடாக நிமிர்த்தி வைப்­பதே குறிக்கோள். அபி­வி­ருத்திப் பணியில் எமது புலம்­பெயர் மக்கள் பிர­தா­ன­மான பங்­கினை ஆற்ற வேண்டும் என்­பது எமது எதிர்­பார்ப்பு. தனியார் முத­லீ­டு­களை நாம் வர­வேற்­கின்றோம். ஆனால் எம்மைப் பிடித்து விழுங்கும் நோக்­குடன் எவரும் எம்­மிடம் வரு­வதை நாம் வர­வேற்க மாட்டோம். எம்மைத் தெற்கின் எடு­பி­டி­க­ளாக மாற்றப் பார்ப்­பதை நாம் வர­வேற்க மாட்டோம்.

எமது அலு­வ­லர்கள் பலர் மேலி­டத்து ஆணை­களை நடை­மு­றைப்­ப­டுத்து பவர்­க­ளா­கவே சென்ற முப்­பது வரு­டங்­க­ளாக இயங்கி வந்­துள்­ளார்கள். புதிய ஜன­நா­யக சூழலில் தாமா­கவே சிந்­தித்துச் செய­லாற்றும் பக்­கு­வத்தை அவர்­க­ளுக்கு வழங்க நீங்கள் முன்­வர வேண்டும். எமது தொழிற்­திறன் அபி­வி­ருத்­திக்கு நீங்கள் ஆவன செய்ய வேண்டும்.

துறை­சார்ந்த விட­யங்கள் சம்­பந்­த­மாக எம் அமைப்­புக்­களால் தரப்­பட்­டவை என் வசம் உள்­ளன. ஆனால் அவை இத்­த­ரு­ணத்தில் உங்­க­ளுக்குத் தேவை­யற்­றவை என்­பதை உணர்­கின்றேன். எனவே கடை­சி­யாக எமது எதிர்­பார்ப்­புக்­களை உங்­க­ளுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்­ப­டு­கின்றேன்.

எம்­முடன் கலந்­தா­லோ­சித்து முன்­னேற வேண்டும் என்று கேட்டுக் கொள்­கின்றேன். எனது அமைச்சின் செய­லா­ள­ருடன் தொடர்பு கொண்டு உரிய நட­வ­டிக்­கை­களை எடுங்கள் என்று கூறி வைக்­கின்றேன். எமது இந்த தேவைகள் கணிப்பு திறம்­பட நடந்தால் சர்­வ­தேச பல்­நி­று­வன செயற்­திட்டம் ஒரு வெற்றித் திட்­ட­மாக அமையும் என்­பதில் சந்­தேகம் தேவை­யில்லை. எமது வட­மா­கா­ணத்தை உங்­க­ளது வெற்­றியின் சின்­ன­மாக நீங்கள் எடுத்துக் காட்­டலாம். நாங்கள் உங்­க­ளுக்கு சகல உத­வி­க­ளையும் நல்க காத்து நிற்­கின்றோம்.

2015க்குப் பின்னரான தொடர் அபிவிருத்திக்கான நிகழ்ச்சி நிரலுக்கு சமாந்தரமாக உங்கள் கணிப்பாய்வை நடைமுறைப்படுத்திச் செல்வது நன்மை பயக்கும். ஜெனிவா ஒன்றிணைந்த பிரேரணையின் ஏற்பாடுகளையும் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுகின்றேன். போர்க்குற்ற விசாரணை முறையாக நடந்தேறினால்த்தான் சமூக நல்லிணக்கத்தை எங்கள் மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பதை நாங்கள் மறந்து விடக்கூடாது.

அதிகாரப் பரவல் எமது மக்களுக்கு நன்மை பயப்பதாய் அமைய வேண்டும். சமாதானத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைய வேண்டும். அரசாங்கம் உள்நாட்டிலும் வெ ளிநாட்டிலும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுத்தால்த்தான் அதன் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.

அவ்வாறான நம்பிக்கை பிறக்க உங்கள் தேவைகள் கணிப்பாய்வு உதவி செய்யவேண்டும்.