Breaking News

ஐ.தே.கட்சியுடன் இணைகிறது கூட்டு எதிர்க்கட்சி

கூட்டு எதிர்க்கட்சியில் இருக்கும் பலர் இதிலிருந்து விலகி ஐ.தே.கட்சியுடன் இணையவுள்ளதாக மேல்மாகாண சபை அமைச்சர் காமினி திலகசிறி தெரிவித்தார்.


நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கூட்டு எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய எழுவர் இந்த விடயம் தொடர்பாக பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதாக கூறினார்.

ஸ்ரீ.சு.கட்சியில் இருக்கும் பாரிய பகுதியினரை ஐ.தே.கட்சி தன்னுடன் இணைத்துக்கொள்ள நினைத்திருப்பதாகவும், அதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் மேல்மாகாண அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இப்படியாக ஸ்ரீ.சு.கட்சியின் ஒரு பகுதியை பிரதமர் இணைத்துக் கொண்டால் நாம் ஐ.தே.கட்சியிலிருக்கும் பலரை எம்முடன் இணைத்துக்கொள்ள நேரிடும் என எச்சரித்தார்.

மேலும், பாராளுமன்றத்தில் ஐ.தே.கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை வழங்கத் தயார் என கூட்டு எதிர்க்கட்சியினர் கூறியிருப்பதாகவும் மேல்மாகாண சபை அமைச்சர் காமினி திலகசிறி கூறினார்.