சிறையில் பார்வையிட வந்தவர்களுக்கு நாமல் டுவிட்டரில் நன்றி!
சிறையில் தம்மை பார்வையிட வந்த அனைவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச டுவிட்டர் ஊடாக நன்றி தெரிவித்துள்ளார்.
நிதிச் சலவையில் ஈடுபட்டதாகத் தெரிவித்து நாமல் ராஜபக்ச மீது நிதிமோசடி விசாரணைப் பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார். இன்றைய தினம் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேருக்கு தலா ஒரு லட்ச ரூபா ரொக்கம் மற்றும் 100 லட்சம் ரூபா நான்கு சரீர பிணையின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டது.
பிணை வழங்கப்பட்டதன் பின்னர் டுவிட்டரில் நாமல் ராஜபக்ச தம்மை பார்வையிட்டவர்களுக்கும், தமக்க ஆறுதல் செய்திகளை அனுப்பியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அனைத்து விதமான சவால்களின் போதும் உங்களின் அசைக்க முடியாத ஆதரவு நிறைவடைந்துவிடாது எனத் தென்படுகின்றது என நாமல் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.