Breaking News

ஜனாதிபதி உரிய நேரத்தில் இரகசியத்தை வெளிப்படுத்துவார்



முன்னாள் ஜனாதிபதி குற்றம் செய்தவர்களுடை தவறுகள் அடங்கிய “பைல்கள்” இருப்பதாகவே கூறியிருந்தார் எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரகசியம் இருப்பதாக கூறியதன் மூலம் அவர் குற்றவாளிகளை பாதுகாப்பதாக எமக்கு கருத முடியாது எனவும் மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

தற்போதைய ஜனாதிபதி இதுபோன்றதொரு அறிவிப்பை பொறுப்பில்லாமல் செய்கின்ற ஒருவர் அல்லர். நேரம் காலம் வரும்போது அவர் கூறியதை வெளிப்படுத்துவார். நாட்டு மக்களுக்கு ஒரு அவதானத்தை அவர் ஏற்படுத்தினார். இதனை அச்சுறுத்தல் என்று என்னால் கூற முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.