Breaking News

புதிய கட்சி அமைத்தால் இதுவரை வெளியிடாத இரகசியங்கள் வெளியே வரும் – மைத்திரி



புதிய அரசியல் கட்சியொன்றை அமைத்தால் இதுவரை வெளியிடப்படாத அரசியல் இரகசிய ங்களை வெளியிட தான் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசின் ஓராண்டு பூர்த்தி விழா நேற்று மாத்தறையில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இந்த இணக்கப்பாடு அரசை எதிர்வரும் 5 வருடங்களுக்கு பலமாக, தேசத்துக்கு நம்பகமான முறையில், தேசத்தின் நலன் கருதி கொண்டு செல்வோம். ஊழல், மோசடி மற்றும் திருட்டு நடவடிக்கைகளுக்கு கிரீடம் ஏற்றிய மக்களுக்கு இந்த நாட்டில் மீண்டும் அரசமைப்பதற்கு நாம் ஒருபோது இடமளிக்க மாட்டோம் என மிகவும் தெளிவாக நாம் கூறுகின்றோம். அவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தால், ஆரம்பித்த நாளில் நாம் இதுவரை வெளிப்படுத்தாத விடயங்களை வெளியில் போட்டு அவர்களுக்கு என்றைக்கும் அரசமைப்பதற்கல்ல, வீதியில் அலைந்து தெரிந்துகொண்டு இருக்க, உரிய பின்னணியை இந்த நாட்டில் ஏற்படுத்துவோம் என்பதை நான் தெளிவாக குறிப்பிட வேண்டும்.” என தெரிவித்தார்.

நல்லாட்சி அரசில் ஊழலில் ஈடுபட்டால் அவர்களுக்கு மற்றையவர்களை விடவும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி இதன்போது மேலும் சுட்டிக்காட்டினார்.