மாற்றுத்திறனாளிகளுக்கான கூடைப்பந்தாட்டம் (படங்கள் இணைப்பு)
மாற்றுத் திறனாளிகளுக் கிடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டி நேற்று முன்தினம் வவுனியநகர சபை கூடைப்பந்தாட்டத்திடலில் நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகளையும், மாற்றுத்திறனாளிகளை பிரதிநிதித்து வப்படுத்தும் அமைப்புக்களையும் ஒன்றிணைக்கும் முகமாக இக் கூடைப்பந்தாட்டப் போட்டி இடம்பெற்றது.
தமிழ் மாற்றுத் திறனாளிகளின் அமைப்பு வட கிழக்கு பகுதிகளிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கிடையில் நடத்தப்படவுள்ள விளையாட்டுக்களின் முன்னோடியாக இப் போட்டி ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா உதவி அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார் கலந்து சிறப்பித்திருந்தார்.