வடக்கில் உள்ள பௌத்த விகாரைகளை அகற்ற முடியாது : சுவாமிநாதன்
வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைகள், புத்தர் சிலைகளை அகற்ற முடியாது என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உறுதியாகக் கூறியுள்ளார்.
தமிழ்கள் செரிந்து வாழும் வடக்கில் சைவ ஆலயங்களின், தமிழ் மக்களின் காணிகளை பலவந்தமாகப் பிடித்து அதில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருவது தொடர்பில் கிளிநொச்சி மக்கள் அமைச்சர் சுவாமிநாதனிடம் முறையிட்டனர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், “பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு பிக்குகள் உட்பட சிங்கள மக்களுக்கு சகல உரிமைகளும் இருக்கின்றன. வடக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளையோ, புத்தர் சிலைகளையோ அகற்றுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை.
தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகளையோ, பௌத்த விகாரைகளையோ அகற்ற முற்பட்டால் அது பாரிய பிரச்சினைகள் ஏற்படுத்தும். எனவே அவ்வாறு செய்ய தான் தயாரில்லை” என்று தெரிவித்துள்ளார்