Breaking News

நாட்டில் திருடர்களுக்கான புதிய கலாச்சார முறை அறிமுகம் – அனுர



தற்போது நாட்டில் திருடர்களுக்கான புதிய கலாச்சார முறை ஒன்று கட்டியெழுப்பப்ப ட்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில்நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் தற்போது திருடர்கள் தொடர்பில் புதிய முறை ஒன்று உருவாகி இருப்பதாகவும் திருடப்பட்ட சொத்துக்களை மீண்டும் அரசுடமையாக்கிக் கொண்டதன் பின்னர், திருடன் சுதந்திரமாக இருப்பதற்கு அரசாங்கம் வழியமைத்துக் கொடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமான மல்வானை பிரதேசத்தில் உள்ள வீடொன்று மற்றும் காணியை அரசாங்கம் கையகப்படுத்தியதன் பின்னர் அவர் சுதந்திரமாக இருப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கள் தொடர்பில் பாரிய சர்ச்சை எழுந்துள்ள நிலையில் ஆளுநரை மாற்றியதன் மூலம் அந்தக் கொடுக்கல் வாங்கல் மறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

மேலும் இவ்வாறு செய்வதென்றால் நாட்டின் சிறைகளில் உள்ள 90 வீதமான திருடர்களையும் விடுவிக்க வேண்டும் எனவும் ஊழல்வாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தல் மற்றும் அவர்களுக்கு எதிராக தண்டனை பெற்றுக் கொடுத்தல் போன்ற செயற்பாடுகளில் நாங்கள் ஈடுபடுவோம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவிளித்தார்