Breaking News

துறைமுக கட்டுமான நிபுணத்துவ உதவிகளை வழங்க சீனா இணக்கம்



பெருநகர மற்றும் துறைமுக கட்டுமானம் தொடர்பான தமது நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களை சிறிலங்காவுக்கு வழங்க, சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் குழுமத்தின் தலைவர் லி ஜியான்ஹோங் இணங்கியுள்ளார்.

சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, சீன மேர்ச்சன்ட்ஸ் குழுமத்தின் தலைவர் லி ஜியான்ஹோங்குடன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடத்திய பேச்சுக்களின் போதே இதற்கான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்துக்கு உதவுவதற்கும், லி ஜியான்ஹோங் விருப்பம் வெளியிட்டுள்ளார்.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் மற்றும் அம்பாந்தோட்டை அபிவிருத்தித் திட்டம் ஆகிய விடங்களில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு உதவிகளை வழங்கவும், சீன மேர்ச்சன்ட்ஸ் குழுமம், இணங்கியுள்ளது.