புலிகளின் முக்கிய உறுப்பினர்களுக்கே விச ஊசி ஏற்றப்பட்டது - சிவமோகன் அதிரடி
முன்னாள் பேராளிகளின் மர்மமான உயிரிழப்புகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டிருப்பது தான் காரணம் என வெளிவரும் தகவல்களில் உண்மையில்லை என நான் கூறவில்லை, அதே நேரம் உண்மை என்றும் கூறவில்லை.
முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனையினை சரியான முறையில் விரைவாக செயற்படுத்த வேண்டும்.
அந்தப் பொறுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிதீவிரமாக செயற்படுகின்றது.இச் சூழலில் இவற்றை விவாதித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை.இதனால் முன்னாள் போராளிகள் உளவியல் ரீதியாக பாதிப்படைய வாய்ப்புகள் இருக்கின்றது என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் இன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்கள் சந்திப்பு தொடர்பகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பன்னீராயிரம் போராளிகளுக்கும் விச ஊசி ஏற்றுவதற்கான சாத்தியம் இல்லை. விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களுக்கு புலனாய்வு பிரிவினரால் திட்டமிட்ட வகையில் விச ஊசி ஏற்றி இருக்கக் கூடும்?
இவற்றை உறுதிப்படுத்த இதுவரை சுகயீனத்தால் இறந்த முன்னாள் போராளிகளின் மருத்துவ சான்றிதழ்கள் மற்றும் விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்த முடியும்.
அவ்வாறு உறுதிப்படுத்தினால் அதுவும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களின் சான்றாக அமையும்.என்று குறிப்பிட்டுள்ளார்.