மஹிந்த, கெஹலிய, ரோஹித உட்பட பலர் நீக்கம்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 41 புதிய அமைப்பாளர்களை நியமிக்க கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
இந்த புதிய அமைப்பாளர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு தற்போழுது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்று வருவதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த யாப்பா அபேயகுணவர்தன, காமினி லொகுகே, கெஹலிய ரம்புகவெல்ல, ரோஹித அபேகுணவர்தன, பவித்ரா வன்னியாராட்சி, சீ.பீ. ரத்நாயக்க, ஜகத் பாலசூரிய, மற்றும் சரத் குமார குணரத்ன உட்பட பலருக்கு அமைப்பாளர் பதவி இல்லாமல் போயுள்ளது.