Breaking News

இத்தாலியினை அடுத்து மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்



மியான்மரில் 6.8 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று சற்று முன்னர் ஏற்பட்டுள்ளது.

இதன் தாக்கம் இந்தியாவின் அசாம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா போன்ற வட மாநிலங்களிலும், கவுகாத்தி, பாட்னா, கொல்கத்தா, திரிபுரா, உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், பங்களாதேஷிலும் உணரப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை, இத்தாலியில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இதில் 38 பேர் பலியாகினர். 150 பேர் கதி என்னவென்று தெரியவில்லை.

அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.