பைத்திய நாய் குளிப்பதற்கு பயப்படுவது போல இந்த அரசாங்கம் தேர்தலுக்கு பயம்..!!
நாடு முகம்கொடுத்துள்ள நெருக்கடி நிலையில் தேர்தல் ஒன்று வந்தால், தோற்றுவிடுமோ என இந்த அரசாங்கம் அஞ்சுகின்றது. இந்த அரசாங்கத்தை தேர்தல் ஒன்றுக்காக அழைத்துச் செல்வது பைத்தியம் பிடித்த நாய் ஒன்றை குளிப்பாட்ட எடுத்துச் செல்வதை விடவும் சிரமமானது என தூய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார்.
இந்த அரசாங்கத்தினால் நாடு நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது. மக்கள் வாழ முடியாது கஷ்டப்படுகின்றார்கள். இந்த நிலையை மாற்றுவதற்கே நாம் தேர்தல் கேட்டு நீதிமன்றம் செல்கின்றோம். தேர்தல் நடாத்தப்பட்டால் இந்த அரசாங்கத்தை மக்கள் மாற்ற பின்னிற்க மாட்டார்கள் எனவும் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேலும் கூறினார்.