Breaking News

கலே முகாமில் 7 ஆயிரம் அகதிகள்



பிரான்ஸின் கலே துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள முகாமில் சுமார் 7 ஆயிரம் அகதிகள் வரை உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸின் கலே துறைமுகப் பகுதியில் அமைந்துள்ளது ‘த ஜங்கிள்’ என்று அழைக்கப்படும் பெரும் அகதிகள் முகாம். இந்த முகாமில் சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளை சேர்ந்த பெண்கள், சிறார்கள் உட்பட ஏராளமான அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சோமாலியா, சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளினை சேர்ந்தவர்களும் இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கலே துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள முகாமில் சுமார் 7 ஆயிரம் அகதிகள் வரை உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஜங்கிள் முகாமில் ஜூன் மாதம் அகதிகளின் எண்ணிக்கை 2,415-ஆக இருந்தது தற்போது 6,901-ஆக மாறியுள்ளது.

முன்னதாக, கலே முகாமிலுள்ள ஆயிரக்கணக்காக குடியேற்றவாசிகளை அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற தீர்ப்பினை பிரான்ஸ் நிர்வாக நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.