இசைப்பிரியா உட்பட ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி வேண்டும்
இறுதிப் போரின் போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்ட இசைப்பிரியா உட்பட ஊடகவிய லாளர்களின் படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என கோரிக்கை ஒன்று முன்வைக்கப்ப ட்டுள்ளது.
போர்குற்ற விசாரணைக்கான பொறிமுறைகள் மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பில் மக்கள் கருத்துக்களை பதிவு செய்த முத்தெட்டுவேகமவின் செயலணியில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பில் மக்கள் கருத்துக்களை பதிவு செய்த முத்தெட்டுவேகமவின் விசேட செயலணியின் யாழ் மாவட்ட உபகுழு மக்கள் கருத்தறியும் அமர்வை நடத்தியது.
இதில் போரினால் பாதிக்கப்பட்ட பல தரப்பினர் கலந்து கொண்டு தமக்கு இழைக்கப்பட்ட கொடுரங்கள் தொடர்பில் நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
குறிப்பாக இந்த அமர்வில் கலந்து கொண்ட யாழ்ப்பாண ஊடகவியலாளர் அமைப்பின் பிரதிநிதிகள் இறுதிக்கட்ட போரின் போது தமிழ் தேசியக் தொலைக்காட்சி ஊடகவியலாளர் இசைப்பிரியா உட்பட படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பில் இதுவரை எந்தவொரு விசாரணைகளும் நடத்தப்படவில்லையென தமது கவலையை வெளியிட்டனர்.
இதேவேளை, வடக்கு கிழக்கில் இடம்பெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகள் தொடர்பான பட்டியல் ஒன்றையும் மனோரி செல்லத்துரை வெளியிட்டு நீதி விசாரணை வேண்டும் என கோரினார்.
இந்நிலையில் இறுதிக்கட்ட யுத்ததில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான கொடுரங்கள் தொடர்பிலான உள்ளக விசாரணைகளில் கலப்பு நிமன்ற பொறிமுறை அவசியம் என சாட்சியமளித்த ஒருவர் குறிப்பிட்டார்.