Breaking News

வடக்கில் 6 ஆயிரம் விதவைகள் வேலைவாய்ப்பு இன்றியுள்ளனர்! வட ஆளுநர் கவலை



வடக்கில் உள்ள 6 ஆயிரம் விதவைகள் வருமானம் இன்றியுள்ளதோடு முன்னாள் போராளிகள் வேலைவாய்ப்பு இன்றியுள்ளனர். என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.

வட மாகாண முதலீட்டாளர் ஒன்றியத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன் ஆரம்ப உரையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் இது தொடர்பில் உரையாற்றுகையில் ,

வடக்கில் உள்ள 6 ஆயிரம் விதவைகள் வருமானம் இன்றியுள்ளதோடு முன்னாள் போராளிகள் வேலைவாய்ப்பு இன்றியுள்ளனர். இவர்களிற்கான தேவைகளை நிறைவு செய்யவும் இவ்வாறான முதலீட்டு ஒன்றியங்களின் மூலம் வழங்க ஆவண செய்ய வேண்டும்.

வடக்கில் பல உட்கட்டுமான அபிவிருத்திகளை கடந்த அரசு மேற்கொண்டிருந்தாலும் அதன் மூலம் முதலீடுகள் , வேலை வாய்ப்புக்களை உருவாக்காது விடின் அந்த உட்கட்டுமானத்தின் முழுமையான பலனை அடைய முடியாது. எனவே அதற்காக முதலீட்டு நடவடிக்கைகள் முக்கியமானது.

வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை அதிகரித்து வேலைவாய்ப்புக்களை அதிகரித்து அதன்மூலம் அவர்களின் தேவையினை நிறைவு செய்ய வேண்டும். இதற்காக வடக்கில் தனியார் துறைகளும் அரசும் இணைந்து முதலிட வேண்டியது சமூக மற்றும் அரசியல் தேவை உள்ளது. என்றார்.