Breaking News

வெளிநாட்டு நிபுணர்களை அனுமதிக்க முடியாது என்கிறார் : கெஹெலிய



காணாமல்போனோர் குறித்து ஆராயும் நிரந்தர அலுவலகமானது மிகவும் பயங்கரமானதாகும். இதனூடாக வெளிநாட்டு நிபுணர்கள் இலங்கை வந்து விசாரணை நடத்தும் நிலைமை ஏற்படும். இதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது என்று கூட்டு எதிரணியினின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். 

காணாமல்போனோர் அலுவலகத்தை கூட்டு எதிரணியினர் கடுமையாக விமர்சிக்கின்றமை தொடர்பாக வினாவியபோதே கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.