Breaking News

ஐ.எஸ். பயங்கரவாதம் உருவாக அமெரிக்க அதிபர் ஒபாமாவே காரணம்: டிரம்ப் கடும் விமர்சனம்

குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள டொனால்டு டிரம்ப் அதிபர் ஒபாமாவை ஐ.எஸ். பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டு கடுமையாக சாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புளோரிடாவில் உள்ள போர்ட் லவ்டர்டேலில் நடந்த பிரச்சாரத்தில் டொனால் டிரம்ப் பேசிய போது, 'தற்போது மத்திய கிழக்கு நாடுகள் முதல் ஐரோப்பிய நாடுகள் வரை ஐ.எஸ் பயங்கரவாதம் வளர்ந்திருப்பதற்கு காரணமாக இருப்பவர் அதிபர் ஒபாமாதான் என வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார். 'பராக் ஹூசைன் ஒபாமா' என அவரது முழுப்பெயரையும் 3 முறை அழுத்தமாக குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். இதுவரை ஹிலாரி கிளிண்டனை ஐ.எஸ். பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டு விமர்சித்து வந்த நிலையில் தற்போது ஒபாமாவை விமர்சிக்க துவங்கியுள்ளார் டிரம்ப்.

ஈராக்கில் இருந்து அமெரிக்க படையை திரும்ப பெறுவோம் என ஒபாமா கூறியிருப்பது ஐ.எஸ். பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பது போன்றது எனவும் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். எனினும், இந்த விமர்சனம் குறித்து வெள்ளை மாளிகை எவ்வித பதிலையும் இதுவரை தெரிவிக்கவில்லை.