Breaking News

விச ஊசி விவகாரம்! ராஜிதவின் கருத்துக்கு அனந்தி கடும் எதிர்ப்பு!



ராஜித சேனாரத்ன மத்திய அரசின் அமைச்சர். கடந்த அரசின் ஆட்சிக் காலத்தில் இனஅழிப்பு இடம்பெற்ற காலகட்டத்திலும் அவர் அப்போதைய அரசில் அமைச்சுப் பதவிவகித்த ஒருவர். அவர் கடந்த காலங்களில் வெளிப்படுத்திய பல்வேறுகருத்துக்களும் தமிழர் தரப்புக்கு எதிராகவே இருந்து வந்துள்ளது.

இலங்கையில் இனஅழிப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபையில் நாங்கள்வலியுறுத்திக் கூறிய போதும் இராணுவத் தரப்புச் சிறு தவறைக் கூடச் செய்யவில்லைஎனும் அடிப்படையில் தன் கருத்தை முன்வைத்திருந்தார்.

எனவே, முன்னாள்போராளிகளுக்கு விஷஊசி ஏற்றப்பட்டதா? இல்லையா? என்பது தொடர்பில் பரிசோதிப்பதற்காக அமெரிக்கடாக்டர்களின் சேவை எமக்கு அவசியமில்லை என அவர் தெரிவித்த கருத்துக்களுக்குத்தமிழர் தரப்பு முக்கியத்துவம் வழங்க வேண்டியதில்லை.

நாங்கள் எங்களால் முடிந்தவரை இந்தப் பாதிப்புத் தொடர்பில் தீர்வினை எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தார் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்.

முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா? இல்லையா?என்பது தொடர்பில் பரிசோதிப்பதற்காக அமெரிக்க டாக்டர்களின் சேவை எமக்குஅவசியமில்லை என வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்மாநாடு நேற்று முன்தினம் புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற போதுஇலங்கையின் சுகாதாரஅமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன வெளியிட்டகருத்து, மற்றும் முன்னாள் போராளிகளின் விஷ ஊசி விவகாரம் தொடர்பில் ஊடகம் வினாவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும்தெரிவிக்கையில்,

முன்னாள் போராளிகளுக்கு மெல்லக் கொல்லும் நச்சு ஊசி ஏற்றப்பட்டதா? என்பதுதொடர்பில் எங்களுக்குப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன.

எனவே, இந்தநச்சு ஊசி விவகாரம் தொடர்பில் நாம் பலரிடமும் விசாரணைகள் நடாத்தியதன்அடிப்படையில் முன்னாள் போராளிகள் மீது மெல்லக் கொல்லும் மருந்துகள்செலுத்தப்பட்டிருக்கின்றன.

ஒரு தடுப்பூசி ஏற்றப்பட்டால் ஏன் ஏற்றப்பட்டது? எதற்காக ஏற்றப்பட்டது என்பதுதொடர்பான ஆதாரபூர்வமான அட்டைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

பல புனர்வாழ்வுமுகாம்களிலும் முன்னாள் போராளிகளான ஆண், பெண் இருபாலாருக்கும் வற்புறுத்திஇந்த ஊசி மருந்து ஏற்றப்பட்டிருப்பதாக அறிகிறோம்.

ஆகவே, இது தொடர்பானசந்தேகத்துக்குத் தீர்வு காணப்பட வேண்டும். முன்னாள் போராளிகள் மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உண்மைகள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும்.

ஆனால், முன்னாள் போராளிகளை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவது தொடர்பில்வடக்கு மாகாண சுகாதார அமைச்சையோ, மத்திய அரசினுடைய சுகாதார அமைச்சையோ நாங்கள்நம்புவதற்குத் தயாராக இல்லை.

ஏனெனில், வடக்கு மாகாண சபை அமையப் பெற்றதன்பின்னர் பூநகரிப் பகுதியில் 50 பெண்களுக்கு கர்ப்பத் தடை ஒரே தடவையில்மேற்கொள்ளப்பட்ட போது ஒரு கர்ப்பிணித் தாய் அநியாயமாக உயிரிழந்தமை தொடர்பில்வினா எழுப்பப்பட்ட போது எங்களுடைய வடமாகாண சுகாதார அமைச்சர் அவர்களுக்கானசிறுநீர்ப் பரிசோதனையை மேற்கொள்ள வசதியின்மை காரணமாக கர்ப்பத் தடைமேற்கொள்ளப்பட்டதாகவும், அப்போது அவர் மரணித்து விட்டதாகவும்தெரிவித்திருந்தார்.

யுத்தத்தால் அங்கவீனமானவர்களுக்கு உடனடியாகச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளவேண்டியது அவசியமானது. ஆனால், கர்ப்பத் தடை அவ்வாறு அவசியமாக மேற்கொள்ளப்படவேண்டியதல்ல.

இதற்கு வடமாகாணச் சுகாதார அமைச்சர் கூறிய விளக்கத்தை என்னால்எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த நிலையில் தற்போது வடக்கு மாகாண சுகாதார அமைச்சும், மத்திய சுகாதாரஅமைச்சும் இணைந்து செயற்படுகின்றதொரு சூழலில் முன்னாள் போராளிகள் சர்வதேசமருத்துவக் குழுவொன்றினாலேயே பரீசீலிக்கப்பட வேண்டும் என்பது என்னுடையஉறுதியான முடிவாகும்.

முன்னாள் போராளிகள் அச்சம் காரணமாக அல்லதுஇராணுவத்தினுடைய நெருக்குதல் காரணமாக இந்த விடயத்திலிருந்து ஒதுங்கநினைத்தாலும் அவர்களுடைய மனைவி, பிள்ளைகள், பெற்றோர்கள் தங்கள் உறவுகளுக்குஉண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய விரும்புகின்றனர்.

உண்மையிலேயே அவ்வாறுவிஷ ஊசி ஏற்றப்பட்டிருந்தால் மாற்று மருந்தைச் செலுத்தி அவர்களது உயிரைக்காப்பாற்ற வேண்டிய தேவையுள்ளது. புலம்பெயர் தேசங்களில் வசித்து வரும் புனர்வாழ்வுக்குட்பட்ட முன்னாள்போராளிகள் உடனடியாக அங்குள்ள மருத்துவரை நாடித் தங்களுக்கான மருத்துவப்பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

முன்னாள் போராளிகள் சிலரும் மருத்துவப்பரிசோதனை தேவையில்லை என்ற அடிப்படையில் கருத்துக்களைத் தெரிவித்து வருவதுடன்பல அரசியல் வாதிகளும் ஆராயாமல் மருத்துவப் பரிசோதனை தேவையில்லை எனக்கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

12,000 முன்னாள் போராளிகளை விடுதலை செய்ததாகச் சர்வதேச சமூகத்திற்கு முகத்தைக்காட்டிய மகிந்த ராஜபக் ஷ அரசாங்கம் திட்டமிட்ட ரீதியில் இவ்வாறான சதிமுயற்சியை மேற்கொண்டிருக்கலாம்.

விடுதலைப் புலிகள் மீளவும் உருவாகிவிடுவார்கள் என அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கலாம். எனவே, இந்தச் சந்தேகத்தைத்தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்புத் தற்போதைய அரசுக்கிருக்கிறது.

அதனை,விடுத்து முழுப் பூசாணிக்காயைச் சோற்றுக்குள் புதைக்கும் வகையில் எந்தவிதமானஅநியாயமும் இடம்பெறவில்லை.

இராணுவத்தினரால் யாருக்கும் தீங்குவிளைவிக்கப்படவில்லை என்ற வகையில் மத்திய சுகாதார அமைச்சால் சொல்லப்படும்கருத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றார்.