Breaking News

“அய்யோ .. நான் போக மாட்டேன்”- பசில்



அய்யோ..! நான் அதற்குப் போக மாட்டேன் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நேற்று (30) பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக இடம்பெற்ற பொது நிதி மோசடி வழக்கில் கலந்துகொள்ள வருகை தந்த போதே ஊடகங்களிடம் அவர் இதனைக் கூறினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாட்டில் கலந்துகொள்வீர்களா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நிச்சயமாக புதிய சின்னத்தில், புதிய கூட்டணியில் போட்டியிடுவோம். தொகுதி அமைப்பாளர்களை நீக்குவது நாம் அல்ல. அது அந்தக் குழுவின் செயற்பாடு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.