Breaking News

யுத்தக்குற்ற நீதிமன்றம் அமைப்பதை துரிதப்படுத்தவே பான் கீ மூன் வருகிறார்



உண்மையை கண்டறியும் குழு யுத்த குற்ற விசாரணை நீதிமன்றம் ஆகியவற்றை அமைக்கும் சட்ட மூலங்களை நிறைவேற்றுவதை துரிதப்படுத்தவே பான்கீன் மூன் இலங்கை வருகிறார் எனக் குற்றம் சாட்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் மூனின் வருகை இலங்கைக்கு பாதகமானது என்றும் குறப்பிட்டது. 

இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில் 

அரசாங்கம் இன்று சர்வதேசத்தின் தேவைகளான காணாமல்போனோர் கண்டறியும் அலுவலகத்தை இலங்கையில் அமைப்பதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. 

அதேபோன்று தேசிய நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தையும் நாட்டுக்குள் ஸ்தாபித்துள்ளது. 

ஐ.நா. வினதும் சர்வதேசத்தினதும் தேவைகளை அரசு நிறைவேற்றியமைக்காக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பதற்காகவே ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீன் மூன் இலங்கைக்கு விஜயம் செய்கின்றார். 

அதேபோன்று உண்மையை கண்டறியும் குழுவை அமைப்பது மற்றும் யுத்தக் குற்றச்சாட்டு நீதிமன்றம் அமைப்பது தொடர்பான சட்ட மூலங்களை இவ்வருட இறுதிக்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதாக அரசு உறுதியளித்துள்ளது. 

இதனை துரிதப்படுத்தி அச் சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுக்கவும் அத்தோடு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேவையான விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்வதற்கான அழுத்தங்களை பிரயோகிக்கவுமே பான்கீன் மூன் இலங்கை வருகிறார்.