தேசிய அரசாங்கத்தின் கதவு மூடப்பட்டுள்ளது- பிரதமர் ரணில்
தேசிய அரசாங்கத்துக்கு மேலும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெலிமடைப் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊழியர் அபிவிருத்திக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.
இன்று நடைபெறும் தேசிய அரசாங்கத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் வந்து தியாகத்துடன் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஒரு குழுவினர் உள்ளனர். இதன்பின்னர், தேசிய அரசாங்கத்துடன் வந்து இணைந்தவர்களும் உள்ளனர்.
இது இவ்வாறிருக்கையில், தேசிய அரசாங்கத்தின் நுழைவாயிலை மீண்டும் திறப்பதற்கு எந்த தேவையும் இல்லையெனவும் தற்பொழுது அது மூடியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் தேர்தலை வெற்றி கொள்வதற்காக அப்போதைய அரசாங்கம் அரசாங்க நிதியை பயன்படுத்திய விதம் குறித்தும் இதன்போது பிரதமர் மேலும் நினைவுபடுத்தியுள்ளார்.