மலேசியா கிளம்புகிறார் மகிந்த
ஆசிய பசுபிக் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அனைத்துலக மாநாட்டில் பங்கேற்பதற்கு, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த மாநாடு வரும் செப்ரெம்பர் 1ஆம் நாள் ஆரம்பமாகி, 4ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.
மகிந்த ராஜபக்சவுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தினேஸ் குணவர்த்தன, லொகான் ரத்வத்தை, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ ஆகியோரும், மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு வரும் செப்ரெம்பர் 4ஆம் நாள் நடைபெறவுள்ள நிலையிலும், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வரும் செப்ரெம்பர் 1ஆம் நாள் சிறிலங்கா வரவுள்ள நிலையிலும், மகிந்த ராஜபக்ச மலேசியாவுக்கான இந்தப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.