Breaking News

இரண்டு மாதங்களில் புதிய அரசியலமைப்பு – பொதுவாக்கெடுப்பும் நடத்தப்படும்



இன்னும் இரண்டு மாதங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் புதிய அரசியலமைப்பு யோசனை, தொடர்பாக மக்கள் கருத்தறியும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய அவர், எமது அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கே முன்னுரிமை கொடுக்கிறது.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எல்லா அரசியல் கட்சிகளும் தமது யோசனைகளை சமர்ப்பிக்க முடியும். இதுபற்றி ஒரு பொதுவான நிலைக்கு வர முடியும்.எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியலமைப்பை உருவாக்க முடியும் என்று நாம் நம்புகிறோம்.

புதிய அரசியலமைப்பு இரண்டு மாதங்களுக்குள் உருவாக்ககப்படும். அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் மக்களின் அங்கீகாரத்துக்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும்.

மக்களின் அங்கீகாரத்துடன் புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு கொண்டு வரப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.