புலி உறுப்பினர்களின் உடலில் விஷ ஊசி – புனர்வாழ்வு ஆணையாளர்
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு விஷ ஊசி சரீரத்திற்குள் ஏற்றப்பட்டுள்ளதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் தான் கவலையடைவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படும் போது, நல்லிணக்கத்துடன் செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அவர்களின் சரீரத்திற்குள் விஷ ஊசி ஏற்றுவதற்கான தேவை தமக்கு காணப்படவில்லை எனவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் சரீரத்திற்குள் விஷ ஊசி ஏற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வுகள் நடாத்தப்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வட மாகாண சபையில் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார்.
சர்வதேச வைத்தியர்களின் ஒத்துழைப்புடன் இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சரின் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புனர்வாழ்வளிக்கப்பட்ட பெரும்பாலான முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தற்போது நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 107 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வட மாகாண சபை உறுப்பினர் ரி.ரவிகரன் தெரிவித்துள்ளார்