கன்னத்தில் அறைந்துவிட்டு விருந்திற்கு அழைப்பது சரியா?
கன்னத்தில் அறைந்து வெளியில் தள்ளி விட்டதன் பின்னர் விருந்துக்கு அழைப்பது போன்றுள்ளது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 ஆவது சம்மேளனத்திற்கான அழைப்பு . எனவே பொது மக்களின் அனுமதி இன்றி சம்மேளனத்திற்கு செல்வது என்பது சாத்தியமற்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடி கூட்டு எதிர் கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
பத்தரமுல்லை , நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் திங்கட்கிழமை இரவு கூட்டு எதிர் கட்சியில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் விஷேட கலந்துரையாடலில் ஈடுப்பட்டனர். இதன்போது அமைப்பாளர் பதவி நீக்கம் மற்றும் சம்மேளனத்தில் கலந்துக் கொள்வது தொடர்பான தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.