பௌத்த விகாரைகளை அகற்றுவதில்லை: மீண்டும் சுவாமிநாதன்
வடமாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளையும், புத்தர் சிலைகளையும் அகற்ற முடியாது என்பதை மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் மீண்டும் உறுதிப்ப டுத்தியுள்ளார்.
எனினும் புதிதாக அமைக்கப்படவுள்ள பௌத்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகள் தொடர்பில் தனக்கு அல்லது அரசாங்கத்திற்கு முறையிட்டால் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் தான் ஒருபோதும் பௌத்த விகாரைகளையோ அல்லது புத்தர் சிலைகளையோ அகற்ற முடியாது என கூறவில்லை மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.
தமிழர் தாயகப் பிரதேசங்களில் பெரும் எடுப்பில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளை அகற்ற முடியாது என கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வைத்து அமைச்சர் சுவாமிநாதன் கூறியிருந்தார்.
எனினும் இதனை ஊடகங்கள் தவறாக புரிந்துகொண்டு செய்தி வெளியிட்டுள்ளதாக நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் முதலீட்டாளர் சம்மேளன அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.