Breaking News

மைத்திரியின் எச்சரிக்கைக்கும் எமக்கும் தொடர்பில்லை- மஹிந்த



நாம் சரியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையில் உள்ளவர்கள். எமக்கும் ஜனாதிப தியின் நேற்றைய முன்தினம் அறிவிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு வருட நிறைவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாத்தறையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக் குறித்து மஹிந்த ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் நேற்று வினவிய போதே இவ்வாறு கூறினார்.

புதிதாக கட்சியை உருவாக்குபவர்களின் இரகசியங்கள் பகிரங்கப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.