ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப அரசு புதிய திட்டம்!
நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப அரச பல்கலைக்கழகங்கள் மட்டுமல்லாது தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்க தீர்மானி த்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கல்வியை அபிவிருத்தி செய்ய அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துக்கொண்டபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுளார்.
இதேவேளை, ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தனியார் கல்லூரிகள் ஊடாக பட்டம்பெற்றவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டாம் எனக் கூறி இலங்கைஆசிரியர் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.