Breaking News

முடிவுக்கு வரும் மஹிந்தவின் ஆட்டம்! - பரபரப்பு தகவல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரவுள்ளதாக, உடலமை ப்பின் குணாதிசயங்களை கொண்டு ஆரூடம் சொல்லும் பேராசியர் சமன் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.


நபர் மற்றும் கட்சி நிறங்களுக்கு அப்பால், ஒருவரின் உடல் அமைப்பின் குணாதிசயங்களை அடிப்படையாக கொண்டு அறிவியலுக்கமைய ஆரூடம் வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டு ள்ளார்.

மஹிந்த ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வார் என 2002ம் ஆண்டு ஜுலை மாதம் 24ம் திகதி அவரின் வீட்டுக்கு சென்று ஆரூடம் வெளியிட்டிருந்தேன்.

நான் மஹிந்தவை சஷிந்திர ராஜபக்சவுடன் சென்று சந்தித்தேன். அவர் சிரிக்கும் போது அவரது இரண்டு கண்களில் சூரிய அறிகுறி அறிவியலை காண முடிந்தது.

அதேபோன்று அவரது கையில் பல இராஜயோக அறிகுறிகள் காணப்பட்டன. மேலும் அவர் பேசும் போதும் நடக்கும் போது தலைவருக்கான அறிகுறி காணப்பட்டன. நெற்றி, கால்கள் மற்றும், கால் விரல்கள் பூமியை தொடும் முறைகளை ஆராய்ந்தே நான் இந்த விடயங்களை கூறினேன்.

அப்போதைய காலப்பகுதியில் சந்திரிக்கா ஜனாதிபதியாகவும், ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும், மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவராகவும் செயற்பட்டனர்.

இந்த சந்தர்ப்பத்தில் நான் மஹிந்தவிடம் தாங்கள் என்றாவது ஒரு நாள் தலைவராக மாறுவீர்கள் என கூறினேன். அந்த நேரத்தில் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும் அப்படியே அவர் தலைவராகினார். தலைவராகிய பின்னர் அவர் அந்த பதவியில் இருந்து விலகும் காலம் தெரிந்தது. இதன் போது 2015ம் ஆண்டு மே மாதத்திற்குள் அவர் ஜனாதிபதி பதவியை இழக்க நேரிடும் என கூறினேன்.

2012ம் ஆண்டு தான் நான் இந்த விடயங்களை கூறினேன். இந்த சந்தர்ப்பத்தில் நான் பல அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.

உடலிலுள்ள அங்க அமைப்பிற்கமைய ஒருவரின் வளர்ச்சி மற்றும் சரிவுகள் ஏற்படும் முறைகளை காணமுடியும். அதற்கமைய மஹிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் இலங்கையில் தலைவராகும் அளவிற்கு அதிஷ்ட யோகம் ஒன்று இல்லை. அவரது காலம் நிறைவடைந்து விட்டது.

தற்போதைய அவரது உடல் அம்சங்களுக்கமைய அவர் எதிர்வரும் நவம்பர் மாதம் 18ம் திகதிக்கு பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் அறிகுறியே காணப்படுகின்றது.

நான் இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சாதகமாக பேசவேண்டும் என்பதற்காக பேசவில்லை. உடல் அம்சங்களின் அறிவியலுக்கமைய நான் மஹிந்த ராஜபக்சவிடம் காணும் உடல் அம்சங்களுக்கமைய தான் அறிவிக்கின்றேன். முன்பு அவரிடம் காணப்பட்ட அறிகுறிகள் தற்போது மறைந்து வருகின்றது.

எவ்வளவு மக்களை இணைத்துக் கொண்டு பாதயாத்திரை மற்றும் மக்கள் கூட்டங்களை நடத்தினாலும் அவருக்கு தலைவராகும் அதிஷ்டம் இல்லை.

உடல் அம்சங்களின் அறிவியலுக்கமைய நான் இது குறித்த யாருடன் வேண்டும் என்றாலும் கலந்துரையாடுவதற்கு ஆயத்தம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.