Breaking News

டக்ளசின் கொலை, கொள்ளையின் விபரம் வாக்குமூலம்(காணொளி)

கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி ஆயுதக்கழுவினால்
நடாத்தப்பட்ட படுகொலைகளின் பட்டியலை அந்த அமைப்பின் மூத்த உறுப்பினரும் சிறீதர் தியேட்டரின் பொறுப்பாளராகவும் ஈ.பி.டி.பியின் மூத்த உறுப்பினராகவும் இருந்த பொன்னையா இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியுள்ளார். 

கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி பத்திரிகை தினமுரசின் பத்திரிகை ஆசிரியர் அற்புதன், ஈ.பி.டி.பி சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம், பத்திரிகையாளர் நிமலராஜன் உட்பட உதயன் பத்திரிகை தாக்குதல் வரை சகல விடயங்களையும் பட்டியல்படுத்தும் பொன்னையா அந்த கொலைகளை உத்திரவிட்டது யார், அதனை செய்தவர்கள் யார் என்பது அடங்கலாக அத்தனை விடயங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆறுபேரை ஒன்றாக கொலை செய்தவர்கள் அந்த கத்தி இரத்தம் காயாமலே கூட்டம் கூட்டப்பட்டபோது நான் அந்த கூட்டத்தில் இருந்தவன் எனக்கு ஈ.பி.டி.பி இன் சகல கொலை விடயங்களும் தெரியும். ஒரு வீட்டில் மாத்திரம் ஒன்றரைக் கோடிரூபா வரையான தங்கநகைகள் கொள்ளை அடித்து டக்ளசிடம் நானே கொடுத்தேன்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் இந்த கொலைகளுக்கு விடுதலைப்புலிகள்மீது முன்னர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது என்றும் ஆனால் அத்தனை கொலைகளுக்கும் ஈ.பி.டி.பி தான் காரணமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது ஊடக சந்திப்பு முழுமையாக




முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட  Fallow ஐ கிளிக் செய்யுங்கள்