தமிழ்த் தலைவர்களுக்கு அடி விழும் ! எச்சரிக்கிறார் அன்ரனி ஜெகநாதன் (காணொளி)
தமிழ் மக்கள் மிகவும் வெறுப்பு நிலைக்கு
வந்துவிட்டார்கள் அரசியல்வாதிகள் எதனையும் செய்வதில்லை. மிகவிரைவில் அரசியல்வாதிகள் மக்களிடம் அடிவாங்கவேண்டிய நிலைவரும் என்று வடமாகாணசபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் இன்றைய சபை அமர்வில் தெரிவித்துள்ளார். வடமாகாணம் என்பது 5மாவட்டங்களை உள்ளடக்கியது என்பதை அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த அரசாங்கத்தில் நல்லாட்சியிலும் இனவாதமே தலைதூக்கியுள்ளது மீள்குடியேற்ற செயலணிகூட முஸ்லீம்களுக்காக உருவாக்கபட்டதாக மீள்குடியேற்ற அமைச்சர் கூறியுள்ளார். நல்லாட்சி எனச் சொல்லப்படும் ஆட்சியில்கூட வடமாகாணத்தில் முல்லைத்தீவு,மன்னார்,வவுனியா ஆகிய மாவட்டங்களில் ஒரு அங்குல நிலம் விடுவிக்கப்படவில்லை.
பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாம் அனைவரும் வாக்களித்திருந்தும் ஏன் அது மாற்றப்பட்டது என அவர் கூறியபோது ஆனல்ட்,சயந்தன் மற்றும் அஸ்வின் தங்களுக்குள் சிரித்துக்கொண்டதையும் ஊடகவியலாளர்கள் அவதானித்திருந்ததோடு காணொளியிலும் அதனை காணலாம்.
அத்தோடு முல்லைத்தீவில் பாடசாலைக்கு சொந்தமான காணி இராணுவத்தால் அபகரிக்கப்பட்டு இப்போது இராணுவத்தினர் அந்த காணியில் பயிர்ச்சி எடுத்து வருவதாகவும் அதனை நாம் கேட்டபோது அது அரசாங்க அதிபரால் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுவிட்டதாக தெரிவித்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
முக்கியமான செய்திகளை முகநூலில்அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்