Breaking News

உலகின் மிக நீளமான விமானம் விபத்துக்குள்ளானது(காணொளி)

உலகின் மிக நீளமான
விமானம் தனது இரண்டாவது பரிசோதனையின்போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

இங்கிலாந்தின் பெட்போர்ட்ஷையர் கவுண்டியில் உலகின் மிக நீளமான விமானத்தின் சோதனை ஓட்டம் இன்று மேற்கொள்ளப்பட்டது. எனினும், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது.

உலகின் மிகப்பெரிய விமானம் இன்று சோதனை ஓட்டத்தின் போது விபத்துக்குள்ளானது என்றும், விமானத்தில் பயணம் செய்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.இந்த விமானம் தொலைத்தொடர்பு கம்பத்தில் மோதியதாகவும் தமிழ்கிங்டொத்தின் செய்தியாளர் தெரிவிக்கின்றார். 


302 அடி நீளம், 143 அடி அகலம், 85 அடி உயரத்துடன் கூடிய உலகின் மிகப்பெரிய இந்த விமானத்தின் சோதனை வெள்ளோட்டம் கடந்த வாரம் வெற்றிகரமாக இடம்பெற்றது.தரையில் இருந்து புறப்படுவதற்கு மட்டும் இந்த விமானத்தில் ஹீலியம் வாயு பயன்படுத்தப்படுகிறது. இதேவேளை குறித்த விமானம் புறப்பட்டு செல்லும் ஓசை, ஏனைய விமானங்கள் எழுப்பும் சப்தத்தைவிட மிகவும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.



முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்